எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் திருத்துறைப்பூண்டியில் நாளை தொடங்குகிறார்


எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் திருத்துறைப்பூண்டியில் நாளை தொடங்குகிறார்
x
தினத்தந்தி 17 March 2021 6:23 AM IST (Updated: 17 March 2021 6:23 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நாளை (வியாழக்கிழமை) திருத்துறைப்பூண்டியில் தொடங்குகிறார்.

சென்னை, 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், கூட்டணி கட்சி சார்பிலும் நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரித்து தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் குறித்த விவரத்தை அ.தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டு்ள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருத்துறைப்பூண்டியில் தொடங்குகிறார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை 18-ந் தேதி (நாளை) முதல் 22-ந்தேதி (திங்கட்கிழமை) வரை மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி, வருகிற 18-ந்தேதி காலை 9 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அன்றைய தினம் வேதாரண்யம், நாகப்பட்டினம், பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதியில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு புவனகிரி தொகுதியில் ஆரம்பித்து, குறிஞ்சிப்பாடி, கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், அரியலூர், குன்னம், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

சூறாவளி பிரசாரம்

20-ந்தேதி (சனிக்கிழமை) கள்ளக்குறிச்சியில் காலை 8.55 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்ப்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், வானூர், திண்டிவனம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி புறப்படும் எடப்பாடி பழனிசாமி, வந்தவாசியில் இருந்து பிரசாரத்தை தொடங்கி, செய்யார், ஆரணி, போளூர், கலசபாக்கம், திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி தொகுதியில் அடுத்தடுத்து பிரசாரம் செய்து, இரவு 9 மணிக்கு வேப்பனஹள்ளியில் நிறைவு செய்கிறார். 22-ந்தேதி (திங்கட்கிழமை) ஓசூர் மற்றும் தளி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஓமலூர் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story