விராலிமலை தொகுதியில் போட்டியிட அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விராலிமலை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன. மேலும், கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 171 வேட்பாளர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விராலிமலை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தாக்கல் செய்தார். வருவாய் கோட்ட அலுவல அதிகாரியிடம் விஜயபாஸ்கர் தனது வேட்புமனு தாக்கல் செய்தார்.
Related Tags :
Next Story