விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு ரூ.38 கோடி சொத்து
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
கடலூர்,
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் பிரேமலதா விஜயகாந்த் தனது பெயரிலும், கணவர் விஜயகாந்த் பெயரிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அந்த வேட்பு மனுவில் தனது கையில் ரூ.45,500-ம், கணவர் விஜயகாந்த் கையில் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ரூ.5 கோடியே 98 லட்சத்து 29 ஆயிரத்து 56 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.32 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கணவர் விஜயகாந்த் பெயரில் ரூ.6 கோடியே 94 லட்சத்து 49 ஆயிரத்து 356 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.41 கோடியே 55 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதவிர பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் ஆகியோர் பெயரில் தலா ரூ.8 கோடியே 15 லட்சம் கடன் தொகை செலுத்த வேண்டி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story