அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி பேச ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை கிடையாது - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி பேச ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை கிடையாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை,
துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் ஜாதகம் பற்றி கூற நான் ஒன்றும் ஜோசியக்காரன் இல்லை.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை நாங்கள் தான் வெளியிட்டு இருக்கிறோம். நாங்கள் தான் அதை செயல்படுத்தப்போகிறோம். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி பேச ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story