புவனகிரி தொடங்கி ஓமலூர் வரை எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி பிரசாரம்


புவனகிரி தொடங்கி ஓமலூர் வரை எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி பிரசாரம்
x
தினத்தந்தி 19 March 2021 5:42 AM IST (Updated: 19 March 2021 5:42 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி தொடங்கி ஓமலூர் வரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி பிரசாரம் செய்து வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார்.

சென்னை, 

சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது 2-ம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) புவனகிரி, குறிஞ்சிபாடி, கடலூர், பண்ருட்டி, இந்திராநகர், விருத்தாச்சலம், அரியலூர், குன்னம், பெரம்பலூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திருவண்ணாமலை-தர்மபுரி

நாளை (சனிக்கிழமை) கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், திருச்சிற்றம்பலம், திண்டிவனம், 21-ந்தேதி வந்தவாசி, செய்யார், ஆரணி, போளூர், கலசபாக்கம், திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி 22-ந்தேதி ஓசூர், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, தர்மபுரி, மொரப்பூர், ஒடசல்பட்டி கூட்டு ரோடு, காடையாம்பட்டி, ஓமலூர்.

மேற்கண்ட தகவல் அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story