தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அப்துல்கலாம் தற்சார்பு கிராமங்கள் உருவாக்க திட்டம் - மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அப்துல்கலாம் தற்சார்பு கிராமங்கள் உருவாக்க திட்டம் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை தொடர்பாக கமல்ஹாசன் கூறியதாவது,
* பெண்களுக்கு ஊதியம் என்பது வேலை வாய்ப்பை உருவாக்குவது; இலவசம் வழங்குவது அல்ல
* தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அப்துல் கலாம் தற்சார்பு கிராமங்கள் உருவாக்க திட்டம்
* இலவச வாஷிங் மெஷினுக்கான கட்டணம் நாளை மக்கள் தலையில் தான் விழும்
* மக்கள் கேண்டீன் உருவாக்கப்படும்... இந்த கேண்டீன் அம்மா கேண்டீன் போன்றதல்ல... ராணுவ கேண்டீன் போன்றது...
* மக்கள் கேண்டீன் திட்டத்தில் தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும்
* தமிழகம் முழுவதும் நகரங்களில் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்
* அரசு சீருடை பணியில் 50 சதவிகிதம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும்
* தமிழகத்தில் மாவட்டம் தொறும் மகளிர் வங்கிகள் உருவாக்கப்படும்
* அனைத்து மாநகராட்சிகளிலும் ’மோனோ ரயில்’ திட்டம் கொண்டுவரப்படும்
* மருத்துவப்படிப்புக்கான ’நீட்’ நுழைவுத்தேர்வுக்கு பதிலாக மாநில பாடத்திட்டங்களை கொண்ட ’சீட்’ நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும்
* தமிழக அரசு பள்ளிகளில் சர்வதேச தரத்தில் உயர்த்துவோம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story