திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமாரின் வேட்புமனு ஏற்பு


திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமாரின் வேட்புமனு ஏற்பு
x
தினத்தந்தி 20 March 2021 10:49 AM GMT (Updated: 2021-03-20T16:19:14+05:30)

திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமாரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.


திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 31 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று  நடைபெற்றது. 

இதில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் போட்டியிடுகிறார். அவரது மனுவில் அரசு வழக்கறிஞர் முன்மொழிந்தது தவறு எனக்கூறி அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து மற்ற கட்சிகள் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் அமைச்சர் ஆர். பி .உதயகுமாரின்  வேட்பு மனு  நிறுத்தி வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. தொடர்ந்து  அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் வேட்பு மனு ஏற்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story