இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு தான் - முதல்வர் பழனிசாமி


இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு தான் - முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 21 March 2021 11:16 AM IST (Updated: 21 March 2021 11:16 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு தான் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், திருவண்ணாமலை, வந்தவாசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் கஷ்டம் நீங்கி ஏற்றம் பெறுவதற்காக பாடுபடும் அரசு அதிமுக அரசு. விவசாயிகளுக்கு முதன்முறையாக நஷ்டஈடு வழங்கியது அதிமுகதான். இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு தான்.

விவசாயம் செழிக்க விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை ஏற்று விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story