கல்வி உரிமை மிக முக்கியமானது...அதை அதிமுக அரசு விட்டுக்கொடுத்துவிட்டது - உதயநிதி ஸ்டாலின்
கல்வி உரிமை மிக முக்கியமானது...அதை அதிமுக அரசு விட்டுக்கொடுத்துவிட்டது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது, கல்வி உரிமை மிக முக்கியமானது... அதை அதிமுக அரசு விட்டுக்கொடுத்துவிட்டது. ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை. ஜெயலலிதா இறந்த பிறகு தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story