காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு - சத்ய பிரதா சாகு பேட்டி


காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு  -  சத்ய பிரதா சாகு பேட்டி
x
தினத்தந்தி 22 March 2021 1:38 PM IST (Updated: 22 March 2021 1:38 PM IST)
t-max-icont-min-icon

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

* தமிழகத்தில் 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர்.

* ஆண் வாக்காளர்கள்-3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர் உள்ளனர்.

* பெண் வாக்காளர்கள்-3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் உள்ளனர்.

* ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம் ஆகும்.

* தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

* தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும்  இல்லை; கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

* கொரோனா பாதித்த வேட்பாளர்கள் கவச உடையுடன் வாக்களிக்கலாம்.

* கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story