சேலம் மேற்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜுக்கு கொரோனா
சேலம் மேற்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜுக்கு கொரோனா மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜூக்கும் தொற்று உறுதி.
சேலம்,
சேலம் மேற்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக அழகாபுரம் மோகன்ராஜ் (வயது 67) போட்டியிடுகிறார். கட்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர், கடந்த 19-ந் தேதி மேற்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து 20-ந் தேதி அவருக்கு காய்ச்சல் வந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அப்போது சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அழகாபுரம் மோகன்ராஜுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அவர், அங்குள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சென்னை அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியிடம் உதவியாளராக இருந்தவருமான பொன்ராஜூக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
Related Tags :
Next Story