தமிழகத்தில் 234 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகபட்சமாக கரூரில் 77 பேர் களத்தில் உள்ளனர்


தமிழகத்தில் 234 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகபட்சமாக கரூரில் 77 பேர் களத்தில் உள்ளனர்
x
தினத்தந்தி 23 March 2021 12:59 AM GMT (Updated: 2021-03-23T06:29:01+05:30)

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கரூரில் அதிகபட்சமாக 77 பேர் போட்டி யிடுகின்றனர்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி காணப்படுகிறது.

7 ஆயிரத்து 255 வேட்புமனுக்கள்

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் சார்பில் 6 ஆயிரத்து 183 மனுக்கள், பெண்கள் சார்பில் 1,069 மனுக்கள், திருநங்கைகள் சார்பில் 3 மனுக்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 16 தொகுதிகளில் 636 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்தன. இந்தநிலையில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை கடந்த 20-ந் தேதி நடைபெற்றது. இதில், முதல்-அமைச்சர் வேட்பாளர்களாக களத்தில் உள்ள அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வேட்பு மனுக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

2,741 மனுக்கள் நிராகரிப்பு

மொத்தம் 4 ஆயிரத்து 506 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 741 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் நெல்லை தொகுதி அ.ம.மு.க., ச.ம.க. வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

வேட்புமனுக்கள் பரிசீலினை அடிப்படையில் 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 506 பேர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றனர். இந்தநிலையில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடைசி நேரத்தில் போட்டியிட விரும்பவில்லை என்று எண்ணும் வேட்பாளர்கள் தங்களுடைய மனுவை திரும்ப பெற்று கொள்வதற்கு நேற்று மதியம் 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

விலகிய வேட்பாளர்கள்

அதன்படி நேற்று பலர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 11 சுயேச்சை வேட்பாளர்களும், அறந்தாங்கியில் 9 சுயேச்சை வேட்பாளர்களும், விருத்தாசலம், பெரியகுளம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 8 சுயேச்சை வேட்பாளர்களும், துறைமுகத்தில் 7 சுயேச்சை வேட்பாளர்களும், அண்ணாநகர், குடியாத்தம், சேலம் தெற்கு, ஒட்டன்சத்திரம், லால்குடி, கீழ்வேளூர், மதுரை மத்தியம், ராஜபாளையத்தில் தலா 6 சுயேச்சை வேட்பாளர்களும், வேப்பனஹல்லி, குமாரபாளையம், பழனி, சிவகாசியில் தலா 5 சுயேச்சை வேட்பாளர்களும், ராமநாதபுரம், திருமங்கலம், மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, சிதம்பரம், கடலூர், திருப்பூர் வடக்கு, போளூர், கலசபாக்கம், பர்கூர், கும்மிடிப்பூண்டியில் தலா 4 சுயேச்சை வேட்பாளர்களும்,

ஆர்.கே.நகர், சோளிங்கர், ஜோலார்பேட்டை, ஊத்தங்கிரி, சங்ககிரி, நாமக்கல், ஈரோடு மேற்கு, உடுமலைப்பேட்டை, நத்தம், மயிலாடுதுறை, வேதாரண்யம், பேராவூரணி, சோழவந்தானில் தலா 3 சுயேச்சை வேட்பாளர்களும் என ஒட்டுமொத்தமாக 294 பேர் வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.

4,220 பேர் போட்டி

இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று மாலை வெளியானது. அதன்படி (நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 6 பேரும் போட்டி களத்தில் உள்ளனர். சென்னையில் அடங்கி உள்ள 16 தொகுதிகளில் 391 பேர் களம் காண்கின்றனர். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் களம் காணும் கொளத்தூர் தொகுதியில் 35 பேரும், குறைந்தபட்சமாக தியாகராயநகரில் 14 பேரும் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் மதியம் 3 மணிக்கு முடிந்தவுடன், அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.

முக்கிய கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் வருமாறு:-

எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

1. எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.)

2. சம்பத்குமார் (தி.மு.க.)

3. ஜமுனா (பகுஜன் சமாஜ் கட்சி)

4. தாசப்பராஜ் (மக்கள் நீதி மய்யம்)

5. பூக்கடை சேகர் (அ.ம.மு.க.)

6. மணி (தேசிய மக்கள் கழகம்)

7. மணிகண்டன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)

8. சூரியமூர்த்தி (எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி)

9. குணசேகரன் (மை இந்தியா கட்சி)

10. சமூக சேவகி ஈஸ்வரி (அம்பேத்கர் ரைட் பார்ட்டி ஆப் இந்தியா)

11. ஸ்ரீரத்னா (நாம் தமிழர் கட்சி)

12. அக்னி ஸ்ரீராமசந்திரன் (சுயே.)

13. ஈஸ்வரமூர்த்தி (சுயே.)

14. பி.ஈஸ்வரமூர்த்தி (சுயே.)

15. அய்யப்பன் (சுயே.)

16. கதிரவன் (சுயே.)

17. கதிரேசன் (சுயே.)

18. குகேஸ்குமார் (சுயே.)

19. சண்முகம் (சுயே.)

20. சவுந்தரராஜன் (சுயே.)

21. டாக்டர் பத்மராஜன் (சுயே.)

22. பழனிசாமி (சுயே.)

23. பாலசுப்பிரமணியம் (சுயே.)

24. பாலமுருகன் (சுயே.)

25. முருகன் (சுயே.)

26. லட்சுமி (சுயே.)

27. லோகநாதன் (சுயே.)

28. ஸ்டாலின் (சுயே.)

ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 24 பேர் போட்டியிடுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

1. ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.)

2. தங்கதமிழ்செல்வன் (தி.மு.க.)

3. முத்துசாமி (அ.ம.மு.க.)

4. பிரேம்சந்தர் (நாம் தமிழர் கட்சி)

5. கணேஷ்குமார் (மக்கள் நீதி மய்யம்)

6. ஹக்கீம் (அ.இ.திரிணாமுல் காங்கிரஸ்)

7. அருண்குமார் (மை இந்தியா கட்சி)

8. கருப்பையா (பகுஜன் சமாஜ் கட்சி)

9. கர்ணன் (அண்ணா திராவிடர் கழகம்)

10. கிருஷ்ணவேணி (அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்)

11. அபுதாகீர் (சுயே.)

12. அன்பழகன் (சுயே.)

13. ஆனந்தராஜ் (சுயே.)

14. கிருஷ்ணன் (சுயே.)

15. குமரகுருபரன் (சுயே.)

16. சலீம் (சுயே.)

17. செந்தில்குமார் (சுயே.)

18. தமிழ்செல்வன் (சுயே.)

19. நந்தகோபால் (சுயே.)

20. நாகேந்திரன் (சுயே.)

21. மணிமாறன் (சுயே.)

22. ராம்பிரகாஷ் (சுயே.)

23. அ.ராஜாமுகமது (சுயே.)

24. த.ராஜாமுகமது (சுயே.)

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் 35 பேர் களத்தில் உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

1. ஆதிராஜாராம் (அ.தி.மு.க.)

2. மு.க.ஸ்டாலின் (தி.மு.க.)

3. ஜெ.ஆறுமுகம் (அ.ம.மு.க.)

4. ஏ.ஜெகதீஷ்குமார் (ம.நீ.ம.)

5. பெ.கெமில்ஸ் செல்வா (நாம் தமிழர்)

6. ஜமால் முகமது மீரா (பகுஜன் சமாஜ்)

7. ஜி.வேல்முருகன் (சிவசேனா)

8. எஸ்.அசோக் குமார் (சுயே.)

9. கே.ஏழுமலை (சுயே.)

10. அக்னி ஸ்ரீ ராமசந்திரன் (சுயே.)

11. ராஜேந்திரன் (சுயே.)

12. ஏ.எல்.நரேஷ்குமார் (சுயே.)

13. எல்.கதிரேசன் (சுயே.)

14. ஜே.சூரியமுத்து (சுயே.)

15. எம்.ஏ.எஸ்.செந்தில்குமார் (சுயே.)

16. டி.நீலமணி (சுயே.)

17. திவ்யா (சுயே.)

18. மலர்விழி (சுயே.)

19. ரமாதேவி (சுயே.)

20. டி.ரவிபறையனார் (சுயே.)

21. சத்தியசீலன் (சுயே.)

22. தேவிகாராணி (சுயே.)

23. நிர்மலாதேவி (சுயே.)

24. எம்.ராஜேந்திரன் (சுயே.)

25. கே.பன்னீர்செல்வம் (சுயே.)

26. மிர்சா சப்தார் அலி (சுயே.)

27. பி.விஜயகுமார் (சுயே.)

28. வி.எஸ்.பொன்ராஜ் (சுயே.)

29. பி.செந்தில்குமார் (சுயே.)

30. சி.ஜீவகுமார் (சுயே.)

31. பி.ஹரிஷ்குமார் (சுயே.)

32. ஜெ.விவேக்ராஜ் (சுயே.)

33. சுரேஷ் (சுயே.)

34. எஸ்.சத்தியமூர்த்தி (சுயே.)

35. ஆர்.செல்வம் (சுயே.)

கமல்ஹாசன்

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட 21 பேர் போட்டியிடுகிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

1. கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்)

2. மயூரா ஜெயக்குமார் (காங்கிரஸ்)

3. வானதி சீனிவாசன்(பா.ஜனதா)

4. சேலஞ்சர் துரை (அ.ம.மு.க.)

5. அப்துல் வகாப் (நாம் தமிழர் கட்சி)

6. ரோகன் (பகுஜன் சமாஜ்)

7. கோபாலகிருஷ்ணன் (நியு ஜெனரேஷன் பீப்பிள்ஸ்)

8. டி.சண்முகவேல் (ஞான சங்கம் கட்சி)

9. கே.ராகுல் காந்தி (இந்துஸ்தான் ஜனதா கட்சி)

10. எம்.விவேக் சுப்பிரமணியம் (மனித உரிமைகள் கழகம்)

11. எஸ்.வெள்ளிமலை (சுயே.)

12. எம்.அல்போன்ஸ் ராஜ் (சுயே.)

13. கே.குமரேசன் (சுயே.)

14. சுந்தரவடிவேலு (சுயே.)

15. எஸ்.செல்லதுரை (சுயே.)

16. கே.செல்வகுமார் (சுயே.)

17. பி.தண்டபானி (சுயே.)

18. எம்.நாகவள்ளி (சுயே.)

19. வி.பழனிகுமார் (சுயே.)

20. எஸ்.ஜெயச்சந்திரன் (சுயே.)

21. என்.ஜெயப்பிரகாஷ் (சுயே.)

டி.டி.வி. தினகரன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட 26 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1. செ.கடம்பூர் ராஜூ (அ.தி.மு.க.)

2. கி.சீனிவாசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)

3. ரா.ராமச்சந்திரன் (பகுஜன் சமாஜ் கட்சி)

4. ச.உடையார் (நாம் இந்தியர் கட்சி)

5. கு.கதிரவன் (மக்கள் நீதி மய்யம்)

6. மா.கோமதி (நாம் தமிழர் கட்சி)

7. க.சண்முகசுந்தரம் (பகுஜன் திராவிட கட்சி)

8. டி.டி.வி.தினகரன் (அ.ம.மு.க.)

9. நம்பி எம்.ஜி.ஆர். (அ.இ.எம்.ஜி.ஆர்.ம.மு.க.)

10. போ.ராஜ்குமார் போலையா (யுனிவர்சல் பிரதர்ஹூட் மூவ்மென்ட்)

11. பா.அதிகுமார் (சுயே.)

12. ஜெ.ரவிசங்கர் ஜெயச்சந்திரன் (சுயே.)

13. சு.கண்ணன் (சுயே.)

14. அ.காளிராஜ் (சுயே.)

15. பா.குணசேகரன் (சுயே.)

16. ஆ.சிவசுப்பிரமணியன் (சுயே.)

17. பே.சுபாஷ் (சுயே.)

18. அ.பட்டுராணி (சுயே.)

19. கி.பாண்டிமுனிஈசுவரி (சுயே.)

20. மு.பொன்னுசாமி (சுயே.)

21. ம.மந்திரசூடாமணி (சுயே.)

22. மா.மாரிமுத்து (சுயே.)

23. ச.ரமேஷ்கண்ணன் (சுயே.)

24. பெ.ராமசாமி (சுயே.)

25. ஜ.ராஜா (சுயே.)

26. சீ.ரெங்கநாயகலு (சுயே.)

சீமான்

திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 20 பேர் போட்டியிடுகிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

1. கே.குப்பன் (அ.தி.மு.க.).

2. கே.பி.சங்கர் (தி.மு.க.)

3. எஸ்.சீமான் (நாம் தமிழர் கட்சி)

4. எம்.சௌந்திரபாண்டியன் (அ.ம.மு.க)

5. மோகன் (மக்கள் நீதி மய்யம்)

6. கோட்டீஸ்வரன் (பகுஜன் சமாஜ் கட்சி)

7. ஏகவள்ளி (நாடாளும்மக்கள் கட்சி)

8. சசிராஜ் (சமதா கட்சி)

9. கா.கோபிநாத் (சுயே.)

10. வ.சுரேஷ் பாலாஜி (சுயே.)

11. செல்லம் என்ற செல்வம் (சுயே.)

12. சி.தன்ராஜ் (சுயே.)

13. து.தமிழீழன் (சுயே.)

14. பா.தனசேகரன் (சுயே.)

15. பிரவீனா (சுயே.)

16. எம்.ஏ.மைக்கேல் ராஜ் (சுயே.)

17. ந.ரமேஷ்குமார் (சுயே.)

18. ந.ராஜேஷ்குமார் (சுயே.)

19. உ.வெங்கடேஷ் (சுயே.)

20. ப.ஜாகிர்உசேன் (சுயே.)

பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் இவருடன் சேர்த்து போட்டியிடும் 29 வேட்பாளர்கள் குறித்த விவரம் வருமாறு:-

1. அய்யாசாமி (பகுஜன் சமாஜ் கட்சி)

2. பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க.)

3. ரா.ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்)

4. அமுதா (நாம் தமிழர் கட்சி)

5. அரசி (ராஷ்டிரிய ஜனதா தளம்)

6. கார்த்திகேயன் (பா.ம.க.)

7. கேசவபெருமாள் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)

8. சத்தியநாதன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)

9. சிவசங்கர் (நியூ ஜெனரேசன் பீப்புள்ஸ் பார்ட்டி)

10. பார்த்தசாரதி (இந்திய ஜனநாயக கட்சி)

11. பிச்சமுத்து (தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம்)

12. அருள்ஜோதி (சுயே.)

13. அன்வர்பாட்சா (சுயே.)

14. சதாசிவம் (சுயே.)

15. சத்திய சீலன் (சுயே.)

16. சரவணன் (சுயே.)

17. செந்தில்முருகன் (சுயே.)

18. தனசேகர் (சுயே.)

19. பெருமாள் (சுயே.)

20. மகாவீர்சந்த் (சுயே.)

21. மணிகண்டன் (சுயே.)

22. முருகானந்தம் (சுயே.)

23. சா.ராதாகிருஷ்ணன் (சுயே.)

24. விருதை என்.ராதிகா (சுயே.)

25. ராமசாமி (சுயே.)

26. ராமதாஸ் (சுயே.)

27. ரவிச்சந்திரன் (சுயே.)

28. வீரமணி (சுயே.)

29. ஸ்டாலின் (சுயே.)

Next Story