பிரசாரங்களில் அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்" - தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


பிரசாரங்களில் அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 23 March 2021 2:13 PM IST (Updated: 23 March 2021 2:13 PM IST)
t-max-icont-min-icon

பிரசாரங்களில் அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தேர்தலின்போது அரசியலமைப்பு பதிவிலுள்ள அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவை பரிசீலினை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், அவர்களையும் கண்காணிப்பதற்கு தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தேர்தலின்போது அரசியலமைப்பு பதிவிலுள்ள அமைச்சர்கள், பிரசாரங்களில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் அதிகாரத்தை பயன்படுத்துவதை தடுக்க கடும் விதிகளை வகுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Next Story