தேர்தல் விதி மீறல்: அமைச்சர், டி.டி.வி. தினகரன் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்கு
தேர்தல் விதி மீறல்: அமைச்சர், டி.டி.வி. தினகரன் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்கு.
திருச்சி,
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று முன்தினம் மாலை தேர்தல் விதிகளை மீறியும், சமூக இடைவெளி இன்றியும், கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுப்பதாக பிரசாரம் செய்ததாக கூறி, தொகுதி பறக்கும் படை அதிகாரி புகார் செய்தார்.
அதன்பேரில் அமைச்சர் உள்பட 550 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், உள்ளிட்ட 600 பேர் மீதும், திருச்சி மேற்கு தொகுதி் அ.தி.மு.க. வேட்பாளர் பத்மநாதன் உள்பட 51 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மொத்தம் 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story