திமுக குடும்ப கட்சி, கார்ப்பரேட் கட்சி, யார் வேண்டுமானாலும் பங்கு செலுத்தலாம் - முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்
கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக குடும்ப கட்சி, கார்ப்பரேட் கட்சி, யார் வேண்டுமானாலும் பங்கு செலுத்தலாம். எம்.ஜி.ஆர் தோற்றுவித்த இயக்கத்தை இமைபோல காத்தவர் தான் ஜெயலலிதா. தலைவர்கள் பேச்சை கேட்டு வளர்ந்தவன் நான். இங்கு மக்கள் தான் முதலமைச்சர்.
அதிமுகவின் ஆட்சியை கவிழ்க்க திமுக பக்கம் சென்றவர் தான் செந்தில்பாலாஜி. 5 கட்சிக்கு மாறிய வேட்பாளர் தான் திமுகவின் செந்தில்பாலாஜி.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story