மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் பழனியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி


மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் பழனியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
x
தினத்தந்தி 24 March 2021 9:32 PM IST (Updated: 24 March 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், பழனியை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

சென்னை

கரூர் பேருந்து நிலையம் அருகே, கரூர் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், குளித்தலை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சின்னசாமி, கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பகவான் பரமேஸ்வரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் இருந்தபோது பதவியை அனுபவித்துவிட்டு, ஆட்சியை கவிழ்க்க முயன்றவர் என, கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி.

தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து திட்டம் மூலம், நீர் வளத்தை பெருக்கியதோடு, தடையில்லாமல் மின்சாரம் வழங்கி, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக ஆளும் அதிமுக மாற்றிக் காட்டி உள்ளோம் என கூறினார்.

அரவக்குறிச்சி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து க.பரமத்தி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநிலத்திற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்றார். 

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல், நத்தம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி  வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், தமிழ் கடவுள் முருகபெருமான் குடிகொண்டுள்ள பழனியை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.

Next Story