தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு


தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 25 March 2021 1:54 PM IST (Updated: 25 March 2021 1:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தபால் வாக்கு பதிவு செய்யும் போது வீடியோ பதிவு எடுக்கப்படும். தமிழகத்தில் மொத்தமுள்ள 88,937 வாக்குச்சாவடிகளில் 10,528 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை.

தபால் வாக்குகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் போது தேர்தல் அலுவலருடன் காவலர் ஒருவரும் செல்வார். வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுவது கண்காணிக்கப்படும். 

234 தொகுதிகளிலும் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வேட்பாளர்களில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண் வேட்பாளர்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 2 பேரும் போட்டியிடுகின்றனர்.

வருமான வரித்துறையினர் அவர்களுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படியில் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறை சோதனைக்கும் தேர்தலுக்கு தொடர்புள்ளதா என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story