“பாஜகவின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சி” - மேற்குவங்காள மக்களுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை


“பாஜகவின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சி”  - மேற்குவங்காள மக்களுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 March 2021 4:22 AM IST (Updated: 26 March 2021 4:27 AM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையினர் ஓட்டுகளை பிரிக்க புதிய அரசியல் கட்சிக்கு பா.ஜனதா பண உதவி செய்வதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல், நாளை (சனிக்கிழமை) தொடங்கி 8 கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி, முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பதார்பிரதிமா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். 

அப்போது, பெயர் குறிப்பிடாமல் ஒரு அரசியல் கட்சியை அவர் கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “ மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா உத்தரவின்பேரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் ஓட்டுகளை பிரித்து, பா.ஜனதாவுக்கு உதவுவதற்காக அக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் நிறுவனர், பா.ஜனதாவிடம் பணம் பெற்றுள்ளார். தயவு செய்து அந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். 

அதுபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பா.ஜனதாவுடன் புரிந்துணர்வுடன் இருக்கின்றன. எனவே, திரிணாமுல் காங்கிரசால் மட்டுமே குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்துவதை தடுத்து நிறுத்த முடியும். வெவ்வேறு மதத்தினர் இடையே நட்புறவை உறுதிப்படுத்த முடியும்” என்று மம்தா பானர்ஜி பேசினார்.

Next Story