தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்கிறது: சென்னையில் நாளை முதல் எடப்பாடி பழனிசாமி 3 நாள் சூறாவளி பிரசாரம்


தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்கிறது: சென்னையில் நாளை முதல் எடப்பாடி பழனிசாமி 3 நாள் சூறாவளி பிரசாரம்
x
தினத்தந்தி 27 March 2021 2:44 AM IST (Updated: 27 March 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நாளை முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். 30-ந்தேதி தாராபுரத்தில் மோடியுடன் இணைந்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்கள் சென்னையில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்குகிறார். ராயபுரம் வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், திரு.வி.க. நகர் பி.எல்.கல்யாணி ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரிக்கிறார்.

பெரம்பூர்-துறைமுகம்

தொடர்ந்து திருவொற்றியூர் கே.குப்பன், ஆர்.கே.நகர் ஆர்.எஸ்.ராஜேஷ், பெரம்பூர்-என்.ஆர்.தனபாலன், கொளத்தூர்-ஆதிராஜாராம், வில்லிவாக்கம்-ஜே.சி.டி.பிரபாகர், எழும்பூர் ஜான்பாண்டியன், துறைமுகம்-வினோஜ் பி.செல்வம் ஆகியோரை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

29-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். மயிலாப்பூர்-நட்ராஜ், தியாகராயநகர்-சத்யா, அண்ணாநகர்-கோகுல இந்திரா, திருவல்லிக்கேணி-கசாலி, ஆயிரம் விளக்கு-குஷ்பு, சைதாப்பேட்டை-சைதை துரைசாமி, விருகம்பாக்கம் விருகை ரவி, மதுரவாயல்-பென்ஜமின், பூந்தமல்லி-ராஜமன்னார், அம்பத்தூர்-அலெக்சாண்டர் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

31-ந்தேதி காலை 9 மணிக்கு வேளச்சேரியில் தனது 3-வது நாள் பிரசாரத்தை மேற்கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சோழிங்கநல்லூர்-கந்தன், தாம்பரம்-டி.கே.எம்.சின்னையா, பல்லாவரம்-சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆவடி க.பாண்டியராஜன், கும்மிடிப்பூண்டி பிரகாஷ், பொன்னேரி-சிறுணியம் பலராமன், மாதவரம் மூர்த்தி, ஆலந்தூர்-பா.வளர்மதி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

30-ந்தேதி மோடியுடன் வாக்கு சேகரிப்பு

இதற்கிடையே பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வர உள்ளார். 30-ந்தேதி தாராபுரத்தில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் மாநிலத்தலைவர் எல்.முருகனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார். அதன்படி 30-ந்தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேச இருக்கிறார். அவர்கள் இருவரும் இணைந்து பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க உள்ளனர்.

இந்த கூட்டம் அன்றைய தினம் பகல் 12.50 மணிக்கு நடக்க இருக்கிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு, தனது பிரசாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார்.

Next Story