சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
சட்டமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர முடியாது ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எந்திர வாக்குப்பதிவை ரத்துசெய்து, முன்பு இருந்தது போல வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று பார்த்திபன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில், இதே கோரிக்கையுடன் கூடிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர உத்தரவிட முடியாது என்று கூறியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர உத்தரவிட முடியாது என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story