தமிழக சட்டசபை தேர்தல்: தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை குஷ்பூ


தமிழக சட்டசபை தேர்தல்:  தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை குஷ்பூ
x
தினத்தந்தி 27 March 2021 3:10 PM GMT (Updated: 27 March 2021 3:10 PM GMT)

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளரான நடிகை குஷ்பூ தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ போட்டியிடுகிறார்.  இதனை முன்னிட்டு அவர் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மேற்குமாட வீதியில் நடிகை குஷ்பூ இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  திடீரென, உணவு விடுதி ஒன்றிற்குள் சென்ற அவர் தோசையை வரிசையாக சுட்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.  இதனை கூடியிருந்த மக்கள் பார்த்து அவரை உற்சாகப்படுத்தினர்.

Next Story