தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2500 துணை ராணுவத்தினர் சென்னை வருகை


தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2500 துணை ராணுவத்தினர் சென்னை வருகை
x
தினத்தந்தி 29 March 2021 6:33 AM IST (Updated: 29 March 2021 6:33 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ரெயில் மூலம் 2500 துணை ராணுவத்தினர் சென்னை வந்தனர்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற இருப்பதால், தேர்தல் ஆயத்தபணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் தமிழகத்துக்கு ரெயில்கள் மூலம் வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி நேற்று சென்னைக்கு 41 கம்பெனி துணை ராணுவப்படையினர் 5 ரெயில்களில் வந்தனர். ஒடிசா மாநிலம் சம்பால்பூரில் இருந்து காலை 9.45 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்த சிறப்பு ரெயிலில் 8 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசாரும், மதியம் 12.15 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து சென்டிரலுக்கு ரெயிலில் 8 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசாரும் வருகை தந்தனர்.

சுமார் 2500 பேர்

இதைத்தொடர்ந்து, 12.30 மணிக்கு மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் இருந்து சென்டிரல் வந்த ரெயிலில் 10 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசாரும், மாலை 4.35 மணிகு குவாலியரில் இருந்து சென்டிரல் வழியாக சேலம் செல்லும் ரெயிலில் 5 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசாரும், இரவு 8.30 மணிக்கு அகர்தலாவில் இருந்து சென்டிரல் வந்த ரெயிலில் 9 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை போலீசாரும், ஒரு கம்பெனி இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்புப்படை போலீசாரும் என 41 கம்பெனி என சுமார் 2 ஆயிரத்து 500 பாதுகாப்பு படையினர் சென்னை வந்தனர்.

பின்னர் அவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்காக பஸ்சில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

Next Story