நிலங்களை பிரதமர் மோடி அபகரிக்கிறார் - மம்தா பானர்ஜி சரமாரி புகார்
நிலங்களை பிரதமர் மோடி அபகரிப்பதாக மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சரமாரி புகார் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது.
எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் நந்திகிராம் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “பாஜக மக்களை பணத்தின் மூலம் விலைக்கு வாங்க பார்க்கிறது. பிரதமர் மோடி நிலங்களை அபகரிக்க முயற்சிக்கிறார். அதானி நண்பரான மோடி, அனைத்தையும் மக்களிடம் இருந்து பறித்து கொள்வார். வெளியூரை சேர்ந்தவர்கள், மேற்கு வங்காளத்தை ஒருபோதும் ஆளு முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 26 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்பதை சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, ஏன் 30 தொகுதிகளில், வெற்றி மாட்டீர்களா? என்று கேலியாக கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story