பெண்களை அவமதிப்பது காங்கிரஸ்-திமுக கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்-தாராபுரம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர் தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாராபுரம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
சென்னை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கோவை வரும் அவர் அங்கிருந்து கேரளா மாநிலம் பாலக்காடுச் என்ரார். அங்கு பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசினார்.
பின்னர் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் அவருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார்.
தாராபுரத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு வேல் பரிசாக அளிக்கப்பட்டது.
வெற்றி வேல், வீர வேல் என்று கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி அவர் பேசும் போது கூறியதாவது;-
தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது . உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றுக்கு வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி
எங்கள் நோக்கம் வளர்ச்சி; காங்கிரஸ் - திமுகவின் நோக்கம் குடும்ப அரசியல்
முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து திமுக அவமதித்தது கண்டிக்கத்தக்கது. முதலமைச்சரின் தாயையே விமர்சித்து பேசுவதா? பெண்களை இழிவுப்படுத்திய திமுக தலைவர்களை கட்சி தலைமை கண்டிக்கவில்லை.திமுக, காங்கிரஸ் தங்கள் தலைவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.
பெண்களை அவமதிப்பது காங்கிரஸ்-திமுக கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். சில நாட்களில், திமுகவின் எம்.எல்.ஏ வேட்பாளர்களில் ஒருவரான தி ரு திண்டுக்கல் லியோனி பெண்களுக்கு எதிராக பயங்கரமான கருத்துக்களை தெரிவித்தார். அவரைத் தடுக்க திமுக எதுவும் செய்யவில்லை.
திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.இளவரசரும் பயங்கரமான கருத்துக்களை தெரிவித்தார். அவரைத் தடுக்க திமுக எதுவும் செய்யவில்லை.. மார்ச் 25, 1989 ஐ ஒருபோதும் மறக்க வேண்டாம். தமிழக சட்டசபையில், திமுக தலைவர்கள் அம்மா ஜெயலலிதா ஜியை எவ்வாறு நடத்தினார்கள் என்பதை திமுக & காங்கிரஸ் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு உத்தரவாதம் அளிக்காது.
காங்கிரஸ் மற்றும் திமுகவிடம் நான் சொல்ல விரும்புகிறேன்- தமிழக மக்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.. பெண்களை அவமதிப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
திமுக ஆட்சிக்காலத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்போதுமே கேள்விக்குறி தான். ஆண்டாள் மற்றும் ஔவையார் காட்டிய வழிப்படி நடப்பது தேசிய ஜனநாயக கூட்டணி.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்.
திருப்பூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையா ரெயில் பாதை இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்.
பெண்களின் கண்ணியத்தை காக்க கிராமப்புறங்களில் கோடிக்கணக்கான கழிவறைகளை மத்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது.
அனைவருக்கும் வீடு திட்டத்தின் பயனாளிகளாக பெண்களை தேர்வு செய்யவே விரும்புகிறோம். மத்திய அரசு வழங்கும் வீடுகள் பெண்களின் பெயர்களில் இருப்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.
கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட தொழில் முனைவோர்கள் எப்போதுமே நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்கள். கொங்கு பகுதி மக்கள் நாட்டிற்கு செல்வத்தை சேர்ப்பவர்கள், மரியாதையை சேர்ப்பவர்கள்.
நாட்டின் வடக்கு பகுதியில் எல்லையை பாதுகாக்கும் ஆயுதம் தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றன. சிறுகுறு தொழில் முனைவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
எளிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறிள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தால் தமிழக சிறுகுறு நிறுவனங்கள் பயன் அடைந்தன.
உலகம் முழுவதுக்குமான பொம்மை உற்பத்தி கேந்திரமாக தமிழகத்தை மாற்ற திட்டமிட்டு உள்ளோம். தமிழகத்தில் 3.6 லட்சம் தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 14ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
சுமார் எட்டு லட்சம் சிறுகுறு நிறுவனங்கள் மத்திய அரசின் கடன் வட்டி தள்ளுபடி திட்டத்தால் பலன் அடைந்துள்ளன.
தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர் தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உழவர்களை உலகம் பின்பற்ற வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது சிறு விவசாயிகளின் நலன்களை காப்பதே மத்திய அரசின் நோக்கம்.பல்வேறு திட்டங்களின் மூலம் சிறு விவசாயிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வோம்
கொங்கு மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம் எளிதாக தொழில் தொடங்க பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம் என கூறினார்.
Related Tags :
Next Story