பாஜக அரசு தமிழர்கள், விவசாயிகள் மற்றும் மருத்துவ கனவு கொண்ட மாணவர்களுக்கு எதிரானது - கனிமொழி எம்.பி. பேச்சு


பாஜக அரசு தமிழர்கள், விவசாயிகள் மற்றும் மருத்துவ கனவு கொண்ட மாணவர்களுக்கு எதிரானது - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 31 March 2021 12:23 PM IST (Updated: 31 March 2021 12:23 PM IST)
t-max-icont-min-icon

பாஜக அரசு தமிழர்கள், விவசாயிகள் மற்றும் மருத்துவ கனவு கொண்ட மாணவர்களுக்கு எதிரானது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை ஆதரித்து கனிமொழி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 
 
பிரசார நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, ' பாஜக அரசு தமிழர்கள், விவசாயிகள் மற்றும் மருத்துவ கனவு கொண்ட மாணவர்களுக்கு எதிரானது. ஆணாதிக்கம் என பேசும் பிரதமரே, ஆணாதிக்க உச்சத்தில் இருந்துதான் நேற்று மேடையில் (தாராபுரத்தில் நடைபெற்ற பிரசாரம்) பேசியுள்ளார்’ என்றார்.

Next Story