ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கு சேகரித்த சைதை துரைசாமி
ஐ.ஐ.டி. வளாகத்தில் மாதிரி வாக்கு எந்திரத்தை காண்பித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி சைதை துரைசாமி கேட்டுக்கொண்டார்.
சென்னை,
சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கிண்டி ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கு சேகரிக்க சென்ற சைதை துரைசாமி, அங்குள்ள உள்ள ஸ்டாப் கிளப் தலைவர் வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்.
ஐ.ஐ.டி. நிர்வாகிகளிடம் மாதிரி மின்னணு வாக்கு எந்திரத்தை காண்பித்து 3-வது இடத்தில் உள்ள பட்டனை அழுத்தி இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர்களிடம் ஆதரவு திரட்டிய சைதை துரைசாமி, மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்த வளாகத்தில் மாநில அரசு எவ்வித விலையில்லா பொருட்களையும் வழங்க இயலாது என்று இருந்த நடைமுறையை தான் மேயராக இருந்தபோது, அரசிடம் ஒப்புதல் பெற்று மிக்சி, கிரைண்டர், கொசுவலை வழங்கியதை நினைவு கூர்ந்தார்.
இஸ்லாமியர்களுடன்...
தொடர்ந்து மாடன் ஹட்மன் ரோடு, பேன்பேட்டை, காவாங்கரை அரசு குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் சைதை துரைசாமி கோட்டூர் கார்டன் பகுதியில் உள்ள மசூதிக்கு சென்றார். அங்குள்ள இஸ்லாமியர்களிடம் அவர் ஆதரவு கோரினார். அதனை தொடர்ந்து சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சைதை துரைசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Related Tags :
Next Story