சென்னையில் இன்றும், நாளையும் வீதி வீதியாக மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட சூறாவளி பிரசாரம்


சென்னையில் இன்றும், நாளையும் வீதி வீதியாக மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட சூறாவளி பிரசாரம்
x
தினத்தந்தி 2 April 2021 10:44 PM GMT (Updated: 2021-04-03T04:14:01+05:30)

சென்னையில் இன்றும், நாளையும் வீதி வீதியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிகட்ட சூறாவளி பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

சென்னை, 

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தியாகராயநகர் - ஆயிரம் விளக்கு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 3-4-2021 அன்று (இன்று) மாலை 5.30 மணி சோழிங்கநல்லூர், 6 மணி வேளச்சேரி, இரவு 7 மணி மதுரவாயல், 7.30 மணி விருகம்பாக்கம், 8 மணி தியாகராயநகர், 8.30 மணி ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

4-4-2021 அன்று (நாளை) காலை 9 மணி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, 10 மணி துறைமுகம், 11 மணி ஆர்.கே.நகர், 11.30 மணி பெரம்பூர், நண்பகல் 12 மணி மாதவரம், மதியம் 3 மணி அண்ணாநகர், 3.30 மணி வில்லிவாக்கம், மாலை 4 மணி எழும்பூர், 5 மணி திரு.வி.க.நகர், 5.30 மணி கொளத்தூர் ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.

வழியில் வேறு நிகழ்ச்சிகள் வேண்டாம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் கட்சியினர் வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாம் என கண்டிப்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story