உதயநிதி ஸ்டாலின் மீது பா.ஜ.க தேர்தல் ஆணையத்தில் புகார்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்து, நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச்31-ம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த அழுத்தத்தை சகித்துக்கொள்ள முடியாமல் முன்னாள் மத்திய அமைச்சர்கள் இறந்துவிட்டனர்’’ என பேசியுள்ளார்.
நந்திகிராமில் நடந்த அரசியல் வன்முறை தொடர்பாக பாரதீய ஜனதா குழு ஒன்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தை நேற்று சந்தித்து புகார் அளித்தது. திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச்31-ம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில்,பேசும் போது முன்னாள் மத்திய மந்திரிகள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில பொதுச்செயலர் கரு நாகராஜன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை நேற்று சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
உதயநிதியின் பேச்சு தேர்தல் நடத்தைவிதிகளுக்கு எதிரானது. எனவே, இந்த தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து உதயநிதியின் பெயரை நீக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். அவர்கள் அந்த மனுவில் கூறி உள்ளனர்.
கரு.நாகராஜன் வழங்கிய மற்றொரு மனுவில் ஆயிரம் விளக்கு தொகுதியில், பள்ளி ஒன்றில் நடைபெற்ற, வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணியின்போது, ஒருவர் சில நிமிடங்களில் சுமார் 15 இயந்திரங்களில் பெயர்,சின்னங்களை பொருத்தியுள்ளார். அதில் திமுகவுக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரியவருகிறது. எனவே அந்த பள்ளியில் சின்னங்கள் பொருத்தப்பட்ட இயந்திரங்களை ஆய்வு செய்யவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story