புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது - மு.க.ஸ்டாலின்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 April 2021 6:23 PM IST (Updated: 3 April 2021 6:23 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6-ந் தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெறும். அரசியல் கட்சிகளும் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரச்சாரத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், “புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது. டெபாசிட் வாங்காத பாஜக, என்.ஆர்.காங் கட்சியை மிரட்டி 9 தொகுதிகளை வாங்கியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற போகிறது. புதுச்சேரியிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி பெற மக்கள் வாக்களிக்க வேண்டும். பாஜக அரசு, ஆளுநர் மூலம் புதுச்சேரி அரசு மக்களுக்கு மிகப்பெரிய தொல்லை கொடுத்து வந்தது” என்று அவர் கூறினார். 

Next Story