ராணிப்பேட்டையில் இன்று காலை ரூ.91 லட்சம் பறிமுதல் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
ராணிப்பேட்டையில் இன்று காலை ரூ.91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணமின்றி வாகனங்களில் எடுத்துச்செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடிக்கு மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடியே 11 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை பறக்கும்படையினர், கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றியுள்ளனர். அதில் பணம் மட்டும் ரூ.210.68 கோடியாகும்.
ராணிப்பேட்டையில் இன்று காலை ரூ.91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதைபோல் கோவையில் ரூ.98 லட்சம், சிவகாசியில் ரூ.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தொகுதி ரூ.1.3 கோடி, பாளையங்கோட்டை - ரூ.12.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story