துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் துணை ராணுவ படையினர் கொடி அணி வகுப்பு நடத்தினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் வாக்காளர்கள் அச்சமின்றி அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த அணிவகுப்புக்கு நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் ஊர்வலமாக சென்றனர்.
செந்துறை சந்தைபேட்டையில் தொடங்கி குரும்பபட்டி காலனி, போஸ்ட் ஆபீஸ் நகர், நேதாஜிநகர், பாத்திமா நகர் வழியாக வந்து மீண்டும் சந்தைப்பேட்டையில் முடிவடைந்தது.
Related Tags :
Next Story