தமிழக சட்ட சபை தேர்தல்: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்தனர்


தமிழக சட்ட சபை தேர்தல்: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்தனர்
x
தினத்தந்தி 6 April 2021 7:20 AM IST (Updated: 6 April 2021 7:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்ட சபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மலை 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு வருகை தந்த நடிகர் அஜித் முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை திருவாண்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்கினை பதிவு செய்தார். 

அதேபோல், நடிகர் ரஜினிகாந்த்தும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். 


Next Story