சென்னை : தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி வாக்குச்சாவடியில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களித்தார்


சென்னை : தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி வாக்குச்சாவடியில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களித்தார்
x
தினத்தந்தி 6 April 2021 8:21 AM IST (Updated: 6 April 2021 8:21 AM IST)
t-max-icont-min-icon

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

சென்னை,

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும்  தொடங்கி நடைபெற்று வருகிறது.  கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

 இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து, தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி கல்லூரியில் மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 

Next Story