தமிழக சட்டசபை தேர்தல் : காலை 9 மணி நேர நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவு


தமிழக சட்டசபை தேர்தல் : காலை 9 மணி நேர நிலவரப்படி  13.80 சதவீத வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 10:53 AM IST (Updated: 6 April 2021 10:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தல் : காலை 9 மணி நேர நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

சென்னை

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர். 

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 

சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

காலை 9 மணி நேர நிலவரப்படி  13.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

காலை 9 மணி வரை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23% வாக்குகள் பதிவாகி உள்ளது.

குறைந்தபட்சமாக  நெல்லை மாவட்டத்தில் 9.98% வாக்குகள் பதிவாகியுள்ளன தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Next Story