புதுச்சேரி சட்டசபை தேர்தல் : 11 மணி நிலவரப்படி 20.07 % வாக்குகள் பதிவு


புதுச்சேரி சட்டசபை தேர்தல் : 11 மணி நிலவரப்படி 20.07 % வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 6:00 AM GMT (Updated: 6 April 2021 6:00 AM GMT)

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 11 மணி நிலவரப்படி 20.07 % வாக்குகள் பதிவாகி உள்ளது.

புதுச்சேரி:

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், புதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.   தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

புதுச்சேரி சட்டசபை தேர்தலில்  11 மணி நிலவரப்படி 20.07 % வாக்குகள் பதிவாகி உள்ளது

புதுச்சேரி - 19.92%, காரைக்கால் - 20.70%, மாஹே - 15.46%, ஏனாம் - 24.17% வாக்குகள் பதிவாகி உள்ளது.

Next Story