தமிழகத்தில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவு


தர்மபுரி எஸ்.வி. ரோடு நகராட்சி பள்ளி வாக்குச் சாவடியில் முககவசத்துடன் வரிசையில் காத்திருந்த பெண் வாக்காளர்கள்.
x
தர்மபுரி எஸ்.வி. ரோடு நகராட்சி பள்ளி வாக்குச் சாவடியில் முககவசத்துடன் வரிசையில் காத்திருந்த பெண் வாக்காளர்கள்.
தினத்தந்தி 7 April 2021 6:25 AM GMT (Updated: 7 April 2021 6:25 AM GMT)

முதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன

சென்னை,

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 234- பகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார். 

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  இரவு 7 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததவும் வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அறை கதவுகள் மூடப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டது. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு இடங்களை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே  2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளது.  குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Next Story