கோவை : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு + "||" + In the college where the voting machines are kept Kamalhasan abrupt study
கோவை : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு
கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன.
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதிவாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 72.78 சதவீத சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ப்ட்டு உள்ளது.
தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 24 நாட்கள் இருக்கின்ற காரணத்தால், எந்தவிதமான அசம்பாவிதங்களும், முறைகேடுகளும் நடந்துவிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் இன்று காலை திடீரென மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்த கல்லூரிக்கு வந்த கமல்ஹாசன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.