என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் அணிகள் நேரடி போட்டி: புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்?


என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் அணிகள் நேரடி போட்டி: புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்?
x
தினத்தந்தி 2 May 2021 1:35 AM GMT (Updated: 2 May 2021 1:35 AM GMT)

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது.

புதுச்சேரி, 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடந்து 24 நாட்களுக்கு பின் 6 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. புதுவை பிராந்தியத்தை பொறுத்தவரை முதலில் 8 தொகுதிகள், அடுத்ததாக 8 தொகுதிகள், அதன்பின் 7 தொகுதிகள் என வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை முதலில்2 தொகுதிகள், அதன்பின் 2 தொகுதிகள், இறுதியாக ஒரு தொகுதி என வாக்குகள் எண்ணப்படுகிறது. ஏனாம், மாகி ஆகிய பிராந்தியங்களில் தலா ஒரு தொகுதி என்பதால் அதன் முடிவுகள் உடனே தெரிய வாய்ப்பு உள்ளது.

வாக்கு எண்ணும் பணிக்காக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை இறுதிகட்ட நிலவரம் நள்ளிரவு 12 மணிக்குள் தெரியவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் அணிகள் இடையே நேரடி போட்டி இருந்த நிலையில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின. எனவே இன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் புதுவையில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Next Story