தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எஸ்.பி.வேலுமணி, முன்னிலை
தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் தொடங்கியது. முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது.
சென்னை
234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், முக்கியத் தொகுதிகளின் முன்னிலை நிலவரம். வருமாறு:-
* திருச்சுழி தொகுதி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு முன்னிலை!
* தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை!
* போடிநாயக்கனூர் தொகுதி முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை!
* எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை!
* திருச்செந்தூர் தொகுதி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை!
* முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் குஷ்பு பின்னடைவு
* பல்லடம் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் முன்னிலை!
* முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சேப்பாக்கம் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
* முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்
* பூந்தமல்லி தொகுதி முதல் சுற்றில் திமுக முன்னிலை - வித்தியாசம் 2862
* செங்கல்பட்டு தொகுதி முதல் சுற்று நிலவரம்: திமுக வேட்பாளர் முன்னிலை - வித்தியாசம் 1415
* திருத்தணி சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை - வித்தியாசம் 1520
* பல்லடம், நிலைக்கோட்டை தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி!
Related Tags :
Next Story