மேற்கு வங்காளம்; திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை
மேற்கு வங்காளம் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கொல்கத்தா,
294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதனால் 2 மாதங்களுக்கு மேலாக மாநில தேர்தல் களம் மிகவும் கொதிநிலையில் இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலை விட அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் அனல் பறந்தது. இதனால் அரசியல் மோதல்கள், வன்முறைகள், தாக்குதல்கள் என பதற்றத்துக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டன.
இப்படி 2 மாதங்களுக்கு மேலாக மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறியது. தற்போதைய நிலவரத்தின் படி திரிணாமூல் காங்கிரஸ் 148 இடங்களிலும் பாஜக 115 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
Related Tags :
Next Story