தமிழக சட்டமன்ற தேர்தல்: திருச்சியில் 9 இடங்களில் தி.மு.க. முன்னிலை


தமிழக சட்டமன்ற தேர்தல்: திருச்சியில் 9 இடங்களில் தி.மு.க. முன்னிலை
x
தினத்தந்தி 2 May 2021 5:02 AM GMT (Updated: 2021-05-02T10:32:56+05:30)

தமிழக சட்டமன்ற தேர்தலில், நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளுக்கு 4 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 73.56 சதவீதம் (17,20,279 பேர்) வாக்குப்பதிவானது. இந்த வாக்குகள் பதிவான இயந்திரங்கள் அனைத்தும் மூடி, முத்திரையிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. 

9 தொகுதிகளிலும் மொத்தம் 5,688 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்கள் அந்தந்த தொகுதி வாரியாக பிரித்து அதற்கான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில், நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இதன்படி ,

மணப்பாறை - 160 வாக்குகள் வித்தியாசம்

ஸ்ரீரங்கம் - 68 வாக்குகள் வித்தியாசம்

திருச்சி மேற்கு - 2905 வாக்குகள் வித்தியாசம்

திருச்சி கிழக்கு  - 3572 வாக்குகள் வித்தியாசம்

திருவெறும்பூர் - 2424 வாக்குகள் வித்தியாசம்

லால்குடி - 252 வாக்குகள் வித்தியாசம் 

மண்ணச்சநல்லூர் - 2844 வாக்குகள் வித்தியாசம்

முசிறி - 1847 வாக்குகள் வித்தியாசம்

துறையூர் - 1829 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

Next Story