தமிழக சட்டசபை தேர்தல் : வெற்றியை பதிவு செய்த வேட்பாளர்கள்


தமிழக சட்டசபை தேர்தல் : வெற்றியை பதிவு செய்த வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 2 May 2021 10:24 AM GMT (Updated: 2 May 2021 10:24 AM GMT)

தமிழக சட்டசபை தேர்தல் : வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

சென்னை

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் 36,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி வெற்றிபெற்றுள்ளார்.

எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட 12,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நாகை மாலி 60,568 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் கா.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

வால்பாறை தனித் தொகுதியில்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், 21 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றது. இத்தொகுதியில் மொத்தமே 6 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 89,130 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார். 

Next Story