சட்டசபை தேர்தல் - 2021

தமிழக சட்டசபை தேர்தல்: மாலை 4 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம் + "||" + 4 pm: Official details released by the Tamil Nadu Assembly Election Commission

தமிழக சட்டசபை தேர்தல்: மாலை 4 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்

தமிழக சட்டசபை தேர்தல்: மாலை 4 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்
மாலை 4 மணி நிலவரப்படி தமிழக சட்டசபை தேர்தல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்
சென்னை

தேர்தல் ஆணையத்தின் 4 மணி தகவல் படி  திமுக கூட்டணி கட்சிகள் மொத்தம் 148 தொகுதிகளில் முன்னிலையில் யில் உள்ளன.  திமுக  125 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 6 தொகுதிகளிலும், மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

ஆளும் அதிமுக கூட்டணியில், அதிமுக 77 தொகுதிகளிலும், பாமக 6 தொகுதிகளிலும், பா.ஜனதா 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. கோவை மேற்கு தொகுதியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். 

வெற்றியை பதிவு செய்தவர்கள்

திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சு.ரவி  வெற்றி பெற்றார்.

பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரைவிட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் 36,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி வெற்றிபெற்றுள்ளார்.

எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட 12,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நாகை மாலி 60,568 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் கா.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

வால்பாறை தனித் தொகுதியில்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், 21 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றது. இத்தொகுதியில் மொத்தமே 6 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 89,130 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக சட்டசபை தேர்தல் : வெற்றியை பதிவு செய்த வேட்பாளர்கள்
தமிழக சட்டசபை தேர்தல் : வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
2. தமிழகத் தேர்தல் முடிவுகள் மாவட்டங்கள் வாரியாக நிலவரம்
தமிழகத் தேர்தல் முடிவுகள் மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் முன்னிலை விவரம் வருமாறு:-
3. கோவை வால்பாறை தொகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த அ.தி.மு.க வேட்பாளர்
கோவை வால்பாறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி.கே.அமுல்கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.
4. சட்டசபை தேர்தல் : தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.
5. தமிழக சட்டசபை தேர்தல் : முன்னிலையில் 16 அமைச்சர்கள்; பின்னடைவை சந்திக்கும் 11 அமைச்சர்கள்
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக அமைச்சர்களில் 11 பேர் தோல்வி முகத்தில் உள்ளனர்.