எய்ம்ஸ் எழுத்துகள் உள்ள செங்கல்லை வழங்கி ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து


எய்ம்ஸ் எழுத்துகள் உள்ள செங்கல்லை வழங்கி ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து
x
தினத்தந்தி 2 May 2021 5:15 PM IST (Updated: 2 May 2021 5:15 PM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் எழுத்துகள் உள்ள செங்கல்லை வழங்கி மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 122 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 156 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

ஆட்சி அமைக்கத் தேவையான 117 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் திமுக முன்னிலை வகிப்பதால், வெற்றி வாய்ப்பு திமுகவிற்கு பிரகாசமாகியுள்ளது.

இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் எழுத்துகள் எழுதப்பட்ட செங்கலைப் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதியில் 49,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். புகைப்படத்தை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

 இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Next Story