திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிற மாநில தேசிய தலைவர்கள்


திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிற மாநில தேசிய தலைவர்கள்
x
தினத்தந்தி 2 May 2021 12:01 PM GMT (Updated: 2 May 2021 12:01 PM GMT)

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிற மாநில தேசிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னனியில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்க போவது உறுதியாகி உள்ளது.

திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் திமுக அதிக இடங்களில் வெற்றி முகத்தில் இருப்பதற்கு தலைவர்கள் பலரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவும் ஸ்டாலினுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், திரு.ஸ்டாலின் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய கலைஞர் கருணாநிதியை போன்று நீங்களும் சமூக நீதியை முன்னெடுத்து சென்று திராவிட சகோதர, சகோதரிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு லாலு பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் , தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்கள் தலைமையிடம் இருந்து நிறைய நன்மைகளை எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிதேச முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவ், சிறப்பான வெற்றியை ஸ்டாலின் பெற்றுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

பீகார் மாநில ராஷ்டிரிய ஜனத தள தலைவர் தேஜஸ்வி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Next Story