என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி - விஜய் வசந்த் டுவீட்


என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி - விஜய் வசந்த் டுவீட்
x
தினத்தந்தி 2 May 2021 6:53 PM IST (Updated: 2 May 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியின் எம்.பி வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனையொட்டி, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம். தமிழக சட்டமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தல் வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 

காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த வசந்தகுமார் எம்.பி மகன் விஜய் வசந்த்தும், பாஜக சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்குமான போட்டியில் விஜய் வசந்த் தற்போதுவரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

விஜய் வசந்த் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுக்கும் மேல் பெற்றுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் 2,58,712 வாக்குகள் பெற்றுள்ளார். வெற்றி உறுதியான நிலையில், விஜய் வசந்த் எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில்,

'என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன்' என்று நன்றியுடன் கோரிக்கையும் வைத்துள்ளார்.

Next Story