திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 2 May 2021 8:17 PM IST (Updated: 2 May 2021 8:17 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 156 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.

இதனையடுத்து மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில்,அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்ய வாழ்த்துகிறேன் என ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story