தமிழக சட்டசபை தேர்தல்: இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்


தமிழக சட்டசபை தேர்தல்: இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்
x
தினத்தந்தி 2 May 2021 3:10 PM GMT (Updated: 2 May 2021 3:10 PM GMT)

தமிழக சட்டசபை தேர்தலில் இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம் வருமாறு

சென்னை

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்ததேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. 

இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியது. திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அதிமுக பின்தங்கியது.

திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.

திமுக மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளது. மாலை 4 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 157 இடங்களிலும், அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது.  திமுக மட்டும் 125 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.  சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி நிலவரங்களும் வெளியாகின.

தற்போதுள்ள முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை பார்க்கையில், திமுக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. அக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார். 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இரவு 8 மணி நிலரவப்படி திமுக 158 தொகுதிகளிலும், அதிமுக 76 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

திமுக கூட்டணி

திமுக - 125
மதிமுக -4
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -2
விடுதலை சிறுத்தைகள் கட்சி -4
மற்றவை -4
காங்கிரஸ் - 15

அதிமுக கூட்டணி

அதிமுக 66 
பாமக -5
பாஜக -4
தமாகா -0
மற்றவை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Next Story