தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் - பிரதமர் மோடி டுவிட்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி 160 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 74 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனை தொடர்ந்து முக ஸ்டாலினுக்கும், திமுக கூட்டணியினருக்கும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், வாக்களித்த மக்களுக்கும் அரசியல் கட்சியினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (அதிமுக கூட்டணி) ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தான் தெரிவிப்பதாக பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன்.
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
Related Tags :
Next Story