நாளை மாலை 6 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் - துரைமுருகன்
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.
சட்டபேரவையில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக மட்டுமே 125 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
நாளை நடைபெற உள்ள திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக சட்டமன்ற கட்சித்தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.
Related Tags :
Next Story